வாழ்வே தண்டனை!
ஓடும் இரயிலை எறிய விட்டான்
ஓயா ரெளத்திரம் பழகி விட்டான்
அறத்தின் பொருளை மறந்து விட்டான்
அழிவின் பாதையில் சென்று விட்டான்
சூழ்ச்சிகள் பலசெய்து பழகி விட்டான்
சூழலையும் அவனுடன் அழித்து விட்டான்
கருவையும் குழந்தையையும் கொல்லுகிறான்
பெண்ணையும் கர்ப்பையும் சிதைத்துவிட்டான்
சகோதரத்துவத்தை அழித்து விட்டான்
சகதியில் வாழ பழகி கொண்டான்
ஆக்கம் வேலையை நிறுத்தி விட்டான்
அழிக்க இன்றொரு சபதம் கொண்டான்
தாயை கொல்லவும் துணிந்து விட்டான்
தாலிகள் அறுபட சிரித்து நின்றான்
படுகொலை செய்வதை பழகி விட்டான் அதை
படம் பிடிப்பதில் ஏனோ பெருமை கொண்டான்
மூத்திர மண்ணாய் மக்கி போனான் தான்
மனிதன் என்பதை மறந்து போனான்
கடவுள் இதுகண்டு கோபம் கொண்டான்
மனிதனை தன்டிக்க இறங்கி வந்தான்
உலகம் இருக்கும் இருப்பை கண்டான்
இதுவே தண்டனை என திரும்பி விட்டான்!
- வெ.பிரஷாந்த்
Monday, December 1, 2008
Indraiya Kuyil Paattu!
இன்றைய குயில் பாட்டு
கேளடா மானிடா எம்மில்
மத பிரிவுகள் இல்லை
குண்டுகள் வைப்பதில்லை இன
சண்டைகள் எம்மில் இல்லை
வாழ்வினில் அச்சமில்லை என்றும்
மான்புடன் வாழ்வோமடா!
ஒருவரை ஒருவர் கொல்ல
ஒருபோதும் அறிந்ததில்லை
திட்டம் தீட்டியே கொல்ல இங்கு
தீயவர் எவருமில்லை
உங்கள் பிறப்பினை கண்டு முன்பு
போற்றி துதித்ததுமுன்டு
உங்கள் வாழ்வினை கண்டு இன்று
உம்மிட நிணைத்தலுமுன்டு
மத பிரிவுகள் சொல்லி அதில்
மக்களை சன்டையிட செய்வார்
மதத்தை காப்பதாய் சொல்லி
மக்களை கொன்றிட முனைவார்
மத பிரிவினை அழித்தால் வையம்
வாழ்ந்திட உருவகையாகும்.
கேளடா மானிடா எம்மில்
மத பிரிவுகள் இல்லை
குண்டுகள் வைப்பதில்லை இன
சண்டைகள் எம்மில் இல்லை
வாழ்வினில் அச்சமில்லை என்றும்
மான்புடன் வாழ்வோமடா!
ஒருவரை ஒருவர் கொல்ல
ஒருபோதும் அறிந்ததில்லை
திட்டம் தீட்டியே கொல்ல இங்கு
தீயவர் எவருமில்லை
உங்கள் பிறப்பினை கண்டு முன்பு
போற்றி துதித்ததுமுன்டு
உங்கள் வாழ்வினை கண்டு இன்று
உம்மிட நிணைத்தலுமுன்டு
மத பிரிவுகள் சொல்லி அதில்
மக்களை சன்டையிட செய்வார்
மதத்தை காப்பதாய் சொல்லி
மக்களை கொன்றிட முனைவார்
மத பிரிவினை அழித்தால் வையம்
வாழ்ந்திட உருவகையாகும்.
Subscribe to:
Posts (Atom)