வாழ்வே தண்டனை!
ஓடும் இரயிலை எறிய விட்டான்
ஓயா ரெளத்திரம் பழகி விட்டான்
அறத்தின் பொருளை மறந்து விட்டான்
அழிவின் பாதையில் சென்று விட்டான்
சூழ்ச்சிகள் பலசெய்து பழகி விட்டான்
சூழலையும் அவனுடன் அழித்து விட்டான்
கருவையும் குழந்தையையும் கொல்லுகிறான்
பெண்ணையும் கர்ப்பையும் சிதைத்துவிட்டான்
சகோதரத்துவத்தை அழித்து விட்டான்
சகதியில் வாழ பழகி கொண்டான்
ஆக்கம் வேலையை நிறுத்தி விட்டான்
அழிக்க இன்றொரு சபதம் கொண்டான்
தாயை கொல்லவும் துணிந்து விட்டான்
தாலிகள் அறுபட சிரித்து நின்றான்
படுகொலை செய்வதை பழகி விட்டான் அதை
படம் பிடிப்பதில் ஏனோ பெருமை கொண்டான்
மூத்திர மண்ணாய் மக்கி போனான் தான்
மனிதன் என்பதை மறந்து போனான்
கடவுள் இதுகண்டு கோபம் கொண்டான்
மனிதனை தன்டிக்க இறங்கி வந்தான்
உலகம் இருக்கும் இருப்பை கண்டான்
இதுவே தண்டனை என திரும்பி விட்டான்!
- வெ.பிரஷாந்த்
5 comments:
இன்றைய குயில் பாடவில்லை. அழுகிறது.
நான் செய்யாத குற்றத்திற்காக நான் ஏன் அழ வேண்டும் என்று கரைகிறது தன் பெற்றோரை இழந்த ஆறு மாத குழந்தை.
இன்னும் ஒரு மாதத்தில் வரவிருக்கும் பெருநாள், கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கலுக்காக இரவு பகல் பாராமல் உழைத்ததென்ன குற்றமா?
இன்னும் எத்தனை எத்தனை பேர் தாங்கள் செய்யாத குற்றத்திற்காக மதம் பிடித்த யானையை போல மக்களை கொன்று குவிக்கும் மிருகங்களுக்கு பலி ஆவர்களோ...
nice ones Prashanth!
ha ha, that was a nice one - kind of reminded me of a song from Sindhu bhairavi "poomalai vangi vandhar"
and hair growth ads pathi therila, oru velai google future predict pannudho? :P
nice post...
Post a Comment